உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துங்கள்!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
116 பார்வைகள்

மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மை பயக்காது என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வலப்பணை மல்லியப்பூ தோட்ட    முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் சிலர் புத்தர் சிலையொன்றை இரவோடு இரவாக நிர்மாணிக்க முற்பட்டபோது இரண்டு தரப்பில் கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் புத்தரின் பேரில் மட்டும் அல்லாமல் எந்த கடவுளின் பெயராலும் இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் இதுபோன்ற செயற்பாடுகளை அரசாங்கம் தடுத்துநிறுத்துவதற்கு இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்

குறிப்பிட்ட இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் பெரிய பெளத்த வழிப்பாட்டு தளம் இருக்கும் போது முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆலய நிருவாகத்தின் அனுமதியும் பெற்றுக்கொள்ளாமல் அத்துமீறிய இனங்களுக்கு இடையிலான முறன்பாடுகளை ஏற்படுத்தும் இந்த செயற்பாடுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

இதுபோன்று வடபகுதியில தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தேவைக்கு மேலதிகமா புத்தர் சிலை வைப்பும் பெளத்த வழிப்பாட்டுத்தளங்கள் நிர்மாணிப்பும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்பட்டிருப்பதோடு பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆகவே இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகள் தொடர்வதை அனுமதிக்கமுடியாது எனவே பொது இடங்களில் மத சின்னங்களை நிறுவுதல் வழிப்பாட்டு தளங்கள் நிறுவுதல் தொடர்பாக மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு பாதிப்பேற்படாத வகையில் பொதுக் கொள்கை ஒன்று உருவாக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

53 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

55 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

48 0 0