உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்ச்சவம் அரச உத்தியோகத்தர்களினால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
123 பார்வைகள்

கிழக்கிலங்கை அம்பாறை மாவட்ட திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவ திருவிழாவில்  அரச உத்தியோகத்தர்களின் திருவிழாவானது திருக்கோவில்  பிரதேச செயலாளர் T. கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது

இவ் திருவிழா நிகழ்வைச் சிறப்பிக்கும் முகமாக திருக்கோவில்  வலயக்கல்வி பணிப்பாளர் R. உதயகுமார் அவர்களின் தலைமையில்  நடன ஆசிரிய ஆலோசகர், நடன ஆசிரியர்கள், நாடக ஆசிரியர்களின்  நெறிப்படுத்தலிலும் திருமதி வனிதா சுரேஸ்
(அழகியல் பாட இணைப்பாளர்)அவர்களின் உந்துசத்தியுடனும்  1000 மாணவர்களின் நாத நர்தன கலை  நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வின் வீதி ஊர்வலத்தில், பாலமுருகன், மயில்கள் அசைந்து வர,கிராமிய கலை வடிவங்களை மாணவர்கள் ஆடி வர,  ஊர் மக்களுக்கு நிகழ்ச்சி பற்றிய   எடுத்துக்கூறலுடன் ஊர்தியில் அழகிய வேல் எடுத்துவரப்பட்டது.

ஆலயத்தில் இசைக்கச்சேரி சங்கீத பாட ஆசிரிய ஆலோசகர், ஆசிரியர்கள், இசைக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. 
ஆலய வீதியில்  1000 மாணவர்களை உள்ளடக்கி கட்டியம் கூறி  நடன  நிகழ்வானது வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பிகப்பட்டது.
பாலமுருகன் உட்பட முருகனின்  ஏனைய வடிவங்களான ஞான முருகன், முதிர் முருகன், ஆண்டி முருகன், அழகு முருகன், வள்ளி தெய்வானை சமேதர முருகன் என பாத்திரமேற்று ஆலய வீதியெங்கும் சுற்றி வந்தது அனைவரையும் பத்தி பரவசத்திற்குட்படுத்தியது. இத்திருவிழாவினை  சிறப்பிக்கும் முகமாக இந்நிகழ்வானது இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  அம்பாரை மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ்மா அதிபர் DIG சுஜித் வெதமுல்ல மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் திருக்கோவில் பிரதேச சபை கௌரவ  தவிசாளர் S.சசிகுமார் திருக்கோவில் பிரதேசத்திற்கு பொறுப்பான உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்   திரு.தயாரத்ன திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர், இந்து கலாசார உத்தியோர்த்தர்கள், திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபை தலைவர்  திரு.சு.சுரேஸ் உட்பட ஆலய நிர்வாகத்தினர்  அரச உத்தியோத்தர்கள், மாணவர்கள், பொற்றோர்கள், பொது மக்கள்  என பலரும்  கலந்தது சிறப்பித்தனர்.

அத்துடன் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய தொண்டர் குழுவினரால் தாக சாந்தி நிகழ்வும் இடம்பெற்றது…

மேலும் இவ்  நிகழ்விற்கு  அயராது பாடுபட்ட அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் அரச உத்தியோதர் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும்  திருக்கோவில் பிரதேச செயலாளர் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார் ..

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

53 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

55 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

48 0 0