உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
134 பார்வைகள்

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பாரம்பரிய கொடியேற்றத்துடன் நேற்று இரவு ஆரம்பமானது.

கதிர்காமக்  கந்தன் ஆலயத்தில் இடம்பெறுகின்ற பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவமும் கப்புறாளைகளினால் வாய்கட்டப்பட்டு உற்சவம் நடைபெற்று வருகின்றது.

கிழக்கிலங்கையில் மிகவும் பழமையும், பிரசித்தமாகவும் இருந்த முருகன் கோயில்கள் திருப்படைக் கோயில்கள் என்றும் அழைக்கப் பெற்றன.

இவ்வாறான பாரம்பரிய சிறப்புகளைக் கொண்ட மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நேற்றிரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

போரதீவுற்று பிரதேச செயலாளர் இ.ரங்கநாதன்,ஆலயத்தின் தேசத்துக்கு குருவான சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள், ஆலய வண்ணக்குமார்கள் தலைமையில் திருவிழா அறிவிப்புகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பாரம்பரிய  முறைப்படி ஆலயத்தின் உட் பகுதிக்குள் பாரம்பரிய முறைப்படி கொடியேற்றம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வள்ளியம்மன் ஆலயம் மற்றும் தெய்வானையம்மன் ஆலயங்களுக்கு முன்பாகவும் இந்த பாரம்பரிய கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும் இத் திருவிழா காலத்தில் தினமும் வேல் தாங்கிய பேழை உள்வீதி வெளிவீதி கொண்டுவரப்பட்டு வீதியுலா நடைபெறும்.

திருவிழாவின்  தீர்த்தோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வாவியில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

நேற்றைய கொடியேற்ற நிகழ்வினை கண்டுகளிப்பதற்கான கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

53 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

55 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

48 0 0