உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் இரண்டு தமிழ் அரசியல் கைதிகளும் சிறையிலேயே உள்ளார்கள்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
72 பார்வைகள்

தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டதான செய்தி ஒன்று அண்மையில் வெளிவந்தது. ஆனால் அவர்கள் இன்னமும் சிறைக்குள் தான் இருக்கின்றார்கள் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளரும் முன்னைநாள் அரசியல் கைதியுமான முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

அதில் இருவருக்கு பிணை வழங்குவதற்கான மேன்முறையீட்டு வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வழக்கிற்கான பிணையே வழங்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக வேறு நீதிமன்றங்களில், வேறு வழக்குகள் நடந்துகொண்டு இருக்கின்றன.

அந்தவகையில் அந்த வழக்குகளுக்கும் பிணை வழங்கப்பட்டால் மட்டுமே அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அந்த வழக்குகளுக்குரிய திகதிகள் எதிர்வரும் 10ஆம் மாதமே உள்ளதால் அவர்கள் தொடர்ந்தும் சிறையிலேயே இருக்கின்றாகள். எனவே அவர்கள் இன்னமும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

44 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

54 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

49 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

57 0 0