உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிறைச்சாலைகளில் தொடரும் கலவரங்கள்; தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
118 பார்வைகள்

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் மற்றும் கலவரங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி அச்சுறுத்தலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“யார் எவ்வாறான கருத்துகளைத் தெரிவித்தாலும், தற்போதைய சிறைச்சாலை மோதல்களும் அசம்பாவிதங்களும் தேசிய பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாகும்.

சிறைச்சாலைகளில் இடம்பெறும் தொடர் அசம்பாவிதங்களைக் அடிப்படையாகக் கொண்டே நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தோம். எனினும், அந்த வாக்கெடுப்பில் அமைச்சருக்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டு அரசு தன் வெற்றியைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடியது.

ஆனால், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர் மஹர சிறைச்சாலையிலும், தொடர்ந்து கொழும்பு மகசின் சிறைச்சாலையிலும், தற்போது குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறைச்சாலைகளிலும் அடுத்தடுத்துப் பிரச்சினைகள் வெடித்துள்ளன.

எனவே, இந்த விவகாரத்தில் அரசு எவ்வித அலட்சியமுமின்றி உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

59 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

56 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

48 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

57 0 0