உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வாள்கள், கத்திகள் மற்றும் கைக்குண்டுடன் இரத்மலானையில் 6 பேர் கைது!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
70 பார்வைகள்

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு ஆகியவற்றுடன் 6 சந்தேகநபர்களைக் கல்கிஸ்ஸ ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 8 கைப்பேசிகளும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்கிஸ்ஸ பொலிஸாரின் விசேட மோட்டார் சைக்கிள் படையணியின் அதிகாரி ஒருவர் இரத்மலானை ஆதர் பிரதேச பகுதியில் 1,000 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவரைக் கைது செய்திருந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, போதைப்பொருள் கொள்முதல் செய்யப்பட்ட இடம் மற்றும் போதைப்பொருள் விற்பனை நடைபெறும் இந்த வீடு பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

குறித்த வீட்டின் நுழைவாயிலில் “சுபுன் சர்பயா நுழைவது தடை” என எழுதப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த ஆயுதங்களும் பணமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 29 வயதுடையவர் என்பதோடு, ஏனைய சந்தேகநபர்கள் 33, 22, 24, 51, 36 ஆகிய வயதுடைய இரத்மலானை, நாவலப்பிட்டி மற்றும் எஹெலியகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர், தடுப்புக்காவல் உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

59 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

56 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

48 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

57 0 0