உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

உயிரியல் பாட வினாத்தாள்களில் பாரிய மொழிபெயர்ப்புக் குறைபாடுகள் : சத்தியலிங்கம் எம்பி சுட்டிக்காட்டல்!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
67 பார்வைகள்

க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல் பாட வினாத்தாளில் பாரிய மொழிபெயர்ப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், இது தமிழ் மொழியில்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்றைய (07.08.2026) கேள்வி நேரத்தின் போது பேசும்போதே இவ்விடயத்தை வெளிப்படுத்தினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
க.பொ.த உயர்தர உயிரியல் பரீட்சை வினாத்தாளில் தொடர்ச்சியாக, அதாவது கடந்த பல வருடங்களாக ஆங்கிலத்தில் தயாரிக்கப்படுகின்ற பரீட்சை வினாத்தாள் தமிழ் மொழிக்கு மாற்றப்படும் போது பாரிய மொழிபெயர்ப்பு தவறுகள் இடம்பெறுகின்றன. இதனால் மாணவர்கள் பெருமளவான புள்ளி இழப்புக்களை சந்திக்கின்றார்கள்.

என்னிடம் 2025ம் ஆண்டு உயிரியல் பரீட்சை வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இருக்கின்றது. அதில் பலவிடைத்தேர்வு வினா( MCQ) பகுதியில் பல வினாக்களில் மொழிபெயர்ப்பு தவறு உள்ளதை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன். உதாரணமாக ஒரு கலத்தின் உள்ளடக்கத்தை குறிக்கும் சொல்லிற்காக உள்ளடக்கத்தின் உள்ளடக்கத்தை குறிப்பது போன்ற தவறுகள் இங்கு காணப்படுவதால் மாணவர்கள் வினாவிற்குரிய பதிலை தெரிவுசெய்வதில் பாரிய இடர்பாடுகள் ஏற்படும்.

கேள்வியிலும் மொழிபெயர்ப்பு பிழை, கொடுக்கப்படும் பதிலிலும் பிழை என்றால் மாணவர்களின் எதிர்காலம் என்னாகும் என்பதை யோசித்துப்பாருங்கள்.

இப்போது சற்றுநேரம் முன்பு கெளரவ சாமர சம்பத் எம்பி என்னிடம் வந்து பேசினார். இந்தமுறை நடக்கும் க.பொ.த உயர்தர பரீட்சையில் பாலி மொழியும் சித்திரமும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் போடப்பட்டிருப்பதாக என்னிடம் சொன்னார். அப்படியெனில், ஒரு மாணவன் பாலி மொழியையும் சித்திரத்தையும் எவ்வாறு ஒரே நாளில் ஒரே நேரத்தில் பரீட்சை எழுதுவதென்று ஒரு பிரச்சினை உள்ளது.

ஆகவே, கெளரவ கல்வி அமைச்சர் அவர்களே, நான் ஏற்கனவே உங்களுடன் இது சம்மந்தமாக பேசியிருக்கின்றேன். நான் பேசியபின் ஒரு தடவை பரீட்சை நடந்திருக்கிறது. அடுத்த பரீட்சையும் வரப்போகிறது. இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இனியாவது இந்த மொழிபெயர்ப்பு தவறு நடக்காமல் தயவுசெய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

க.பொ.த உயர்தர பரீட்சை ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பரீட்சையாகும். இந்த தவறினால் பல மாணவர்களின் எதிர்காலம் நாசமடைகின்றது. தயவுசெய்து இவ்விடயத்தை கவனியுங்கள் என குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

59 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

57 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

48 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

57 0 0