உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மன்னாரில் பற்றைக் காடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
149 பார்வைகள்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியில் பற்றைக்காட்டு பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (7) மதியம் ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில்  சடலம் ஒன்று காணப்படுவதை  அவதானித்த அப்பகுதி மக்கள்  உடனடியாக கிராம சேவையாளர் ஊடாக பேசாலை போலீசாருக்கு   தகவல் வழங்கினர்.

இதையடுத்து பேசாலை பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றனர்.

இதன் போது பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டதோடு பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சடலமாக மீட்கப்பட்ட நபர் பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் (வயது-41 ) என அடையாளம் காணப்பட்டார்.

குறித்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும்,மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்ட   இடத்தில் இருந்து சற்று தொலைவில் அவரது வீடு உள்ளமை தெரிய வந்துள்ளது.

பேசாலை போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த குற்றத்தடுப்பு தடயவியல்  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

உயிரிழந்த குறித்த நபரின்  தொலைபேசி தொடர்புகள் நேற்று வியாழக்கிழமை (6) காலை 7.30 மணிக்கு பின்னர் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சடலத்தை மீட்ட பேசாலை பொலிஸார் குறித்த நபரின் மரணம் தொடர்பில்   விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

59 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

57 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

48 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

57 0 0