உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிறைக்கைதிகளின் பிரச்சினைகளை ஆராயக் கூட்டுப் பொறிமுறை!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
53 பார்வைகள்

சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக மறுஆய்வு செய்யும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளின் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது பரவலாக ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன், கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் அவசர சூழ்நிலைகளின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்கு ஒரு கூட்டுப் பொறிமுறையை உருவாக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, 33 சிறைச்சாலைகளுக்கும் பொருந்தும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் முப்படையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கூட்டுப் பொறிமுறை ஒன்று எதிர்வரும் வாரத்தில் உருவாக்கப்படவுள்ளதுடன், அவர்கள் சிறைக்கைதிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

59 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

56 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

48 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

57 0 0