உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பரீட்சார்த்திகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனர்த்த முகாமைத்துவ மையம் நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
64 பார்வைகள்

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் பரீட்சைகளின் போது அசம்பாவிதங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் தேவையான உத்தியோகத்தர்களுடன், நிவாரண உபகரணங்களும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

நிலவும் காலநிலை நிலவரத்திற்கு மத்தியில் எதிர்வரும் மூன்று நாட்களும் மிகவும் தீர்மானமிக்கவை என அனர்த்த முகாமைத்துவ மையத்தின் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்கான பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படக்கூடியதாக அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்குச் செல்லும் வீதிகள் மற்றும் போக்குவரத்து வழிகளை தடையின்றி பேணுவதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள நீர் பெருக்கு காரணமாக பரீட்சை மையங்களுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், படகுகள் மற்றும் விசேட பாதுகாப்பு வாகனங்கள் மூலம் மாணவர்களைப் பாதுகாப்பாக பரீட்சை மண்டபங்களுக்கு அழைத்துச் செல்ல விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெள்ளப்பெருக்கு அல்லது மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பரீட்சார்த்திகள் ஏதேனும் அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அவசர அழைப்பு இலக்கமான 117, பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கம் அல்லது 011 2136136, 011 2136222, 011 2136223 ஆகிய விசேட தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

51 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

51 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

59 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

56 0 0