உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

‘ராமாயணா’ படத்தில் நடிக்காமை குறித்து நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்!

சினிமா 2 வாரங்கள் முன்
130 பார்வைகள்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கத் தான் மறுத்ததாகப் பரவி வரும் தகவல்களுக்கு நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதற்கட்ட விளம்பரப் பதிவுகள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

இருப்பினும், சீதை கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி பொருத்தமாக இல்லை எனச் சமூக வலைதளங்களில் சில விமர்சனங்கள் எழுந்தன.

அதேவேளையில், இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ‘கே.ஜி.எஃப்’ பட புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவரே அதனை நிராகரித்ததால் சாய் பல்லவிக்கு அந்த வாய்ப்பு சென்றதாகவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில், இந்த வதந்திகள் குறித்துப் பேசியுள்ள நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி,

சீதையாக நடிக்க எனக்கு முதலில் வாய்ப்பு வந்ததாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.

நான் அந்தப் படத்திற்கான தேர்வில் கலந்து கொண்டேன், ஆனால் தேர்வு செய்யப்படவில்லை. என்னால்தான் சாய் பல்லவிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்று கூறப்படுவதும் முற்றிலும் தவறான தகவல். இது வெறும் வதந்தி மட்டுமே, எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0