உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மூதூர் நிவாரணப் பணியாளர்கள் படுகொ*லைக்கு இலங்கை அரசிடம் நீதி கோரும் ஐ.நாவின் நிபுணர்கள்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
139 பார்வைகள்

திருகோணமலை – மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையையும் நீதியையும் இழப்பீட்டையும் காலதாமதமின்றி உடனடியாக வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் இலங்கை அரசை வலியுறுத்திக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி, இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்திருந்த சூழலில், மூதூரில் பிரான்ஸ் தொண்டு நிறுவனமான ‘ஏ.சி.எப்’ அலுவலக வளாகத்தில் 17 நிவாரணப் பணியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெரும்பான்மையானோர் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் கொல்லப்பட்டிருந்தமையுடன், அக்காலகட்டத்தில் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய குடிதண்ணீர் மற்றும் சுகாதார சேவைகளை வழங்கி வந்த ஒரே சர்வதேச தொண்டு நிறுவனமாக ஏ.சி.எப் மாத்திரமே செயற்பட்டு வந்தது.

இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஐ.நா. நிபுணர்கள், கொல்லப்பட்டவர்கள் எவரும் ஆயுதம் ஏந்திய போராளிகள் அல்லவென்றும், மோதலில் சிக்கிய பொதுமக்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்கி வந்த மனிதநேயப் பணியாளர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். நிவாரணப் பணியாளர்கள் மீதான இத்தாக்குதலானது சர்வதேச மனிதநேய விதிகளுக்கு முரணானது மட்டுமன்றி, மோதலால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்குச் சென்றடைய வேண்டிய அத்தியாவசிய உதவிகளையும் முற்றாக முடக்கியதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை உட்படப் பல்வேறு சர்வதேச விசாரணைகள், இப்படுகொலைக்கு இலங்கைப் பாதுகாப்புப் படையினரே பொறுப்பு என நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளன. இருப்பினும், இலங்கையின் உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுக்கள் போதிய சாட்சியமின்மை, சாட்சிகளுக்கான பாதுகாப்பின்மை மற்றும் அரசியல் தலையீடுகள் காரணமாகத் தோல்வியடைந்தன.

குறிப்பாக, 2008 ஆம் ஆண்டு இந்த விசாரணைகளைக் கண்காணித்த சர்வதேச சுயாதீன புகழ்பெற்ற நபர்கள் குழு, இலங்கை அரசிடம் அரசியல் விருப்பமின்மை நிலவுவதாகக் கூறி விசாரணைகளில் இருந்து விலகிக்கொண்டதை ஐ.நா. நிபுணர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் கடந்துவிட்ட போதிலும், இப்படுகொலைக்குக் காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படவோ அல்லது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவோ இல்லை. இந்தத் தொடர்ச்சியான தண்டனையின்மையானது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஆறாத துயரத்தை மேலும் நீட்டிப்பதுடன், நாட்டின் சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கையையும் சீர்குலைத்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இப்படுகொலையின் விளைவாக, காந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் மற்றும் கிணறுகள் சீரமைப்பு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பணிகள் தடைப்பட்டன. இதனால் அப்பகுதியில் இருந்த 3 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பற்ற குடிதண்ணீர், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரினால் பரவும் நோய்களுக்கு ஆளாகினர். அத்துடன், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட அச்ச சூழ்நிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரணப் பணியாளர்கள் வெளியேறியதுடன், 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடையும் வரை நிவாரணப் பணிகளுக்கான இடைவெளியும் பெருமளவில் சுருங்கியது.

உலகளவில் நிவாரணப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், மூதூர் படுகொலை போன்ற கொடூரச் சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறல் இல்லாமல் இருப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று ஐ.நா. நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே, மூதூர் படுகொலை தொடர்பில் உடனடியாகச் சுயாதீனமான, நடுநிலையான மற்றும் நம்பிக்கையான விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்குமாறும் அவர்கள் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் இலைக்கஞ்சி வழங்கலும்.!

தேசிய நீரிழிவு தினத்தை முன்னிட்டு, நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், அராலி மத்திய சித்த மருந்தகத்தில் விழிப்புணர்வுக்…

65 0 0
இலங்கை செய்திகள்

உணவு ஒவ்வாமை; 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள், உணவு ஒவ்வாமையால் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்குள்ளான நிலையில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வட்டவளை பொலிஸ்…

79 0 0
இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொ**லை.!

நுவரெலியா, வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கெட்டிவெல பகுதியில் அயலவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், நேற்று (16) திங்கட்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை…

82 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவன் தேசியத் தலைவர் பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்று பார்வை.!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்று இன்றையதினம் பார்வையிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்…

71 0 0