உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

‘தட்டிவிடாமல் என்னை தட்டிக் கொடுங்கள்’!

சினிமா 2 மாதங்கள் முன்
140 பார்வைகள்

சமீபத்தில் 72 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் ராயன் படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதில் ராயன் படத்திற்கு அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய விவாதத்திற்கும், சர்ச்சைக்கும் வழிவகுத்தது.

காரணம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட ‘மகாராஜா’, ‘வாழை’, ‘மெய்யழகன்’ போன்ற தகுதியான படங்கள் இருக்கும் போது, சராசரி விமர்சனங்களைப் பெற்ற ‘ராயன்’ படத்திற்குச் சிறந்த தமிழ்ப் படம் விருது கொடுக்கப்பட்டது ஏன் என கேள்விகள் எழுந்தன.

மேலும் ‘தங்கலான்’ படத்திற்காக நடிகர் விக்ரம் தனது உடல் அமைப்பையே மாற்றி, மிகக் கடுமையான உழைப்பைக் கொடுத்திருந்தார். அவருக்கு இந்த முறை நிச்சயம் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் தனுஷின் ராயன் படம் குறித்து விவாதம் அதிகரித்தது. இதுதொடர்பான மீம்ஸ்களும் இணையத்தை ஆக்கிரமித்தன. இந்த விமர்சனங்களுக்கு தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த சர்ச்சைகள் குறித்து பேசியுள்ளார் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியபாளையம் அருகே, அவரது ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் நடிகர் கலந்துகொண்டு பேசினார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர்.,

“ராயனுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ராயன் வெளியான வருடத்தில் பல நல்ல படங்கள் வெளியாகின. அதன் ரசிகர்களின் அதற்கான அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதை மதிக்கிறேன். புதுப்பேட்டை, வடசென்னை, மயக்கம் என்ன, மரியான் போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என தெரிவித்தார்கள். ஆனால் கிடைக்கவில்லை.

ராயன் திரைப்படத்துக்கு தேசிய விருது தானாக கிடைத்தது. தமிழனாக எனக்கு மேலும் 2 தேசிய விருது கிடைத்துள்ளது. தட்டிவிடாமல் என்னை தட்டிக்கொடுங்கள்.” என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

“தர்மன்” படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்!

ரஜினியின் ‘தர்மன்’ படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173 ஆவது திரைப்படமான…

30 0 0
சினிமா

கர்நாடக இசை அரசியாக மாறும் ராஷ்மிகா மந்தனா!

இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை…

40 0 0
சினிமா

சூர்யா – ஜோதிகாவின் ‘20 Years of Love & War’ காணொளி : 13 மணி நேரத்தில் 4.8 கோடி பார்வைகள்!

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தம்பதியினரின் ‘20 Years of Love & War’ Collab காணொளி சமூக வலைத்தளங்களில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது.…

34 0 0
சினிமா

திரைப்பட விளம்பரத்தில் அரசியல் கலக்கக் கூடாது : ஜேசன் சஞ்சய் வெளிப்படை!

முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது அறிமுக திரைப்படமான ‘சிக்மா’ (Sigma) தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள…

62 0 0