உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
190 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயத் துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக எல்நினோ காலநிலையை எதிர்கொள்வது தொடர்பாகவும்  கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் பெரும்போக நெற்ச்செய்கையின்   போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டன.

இதன்போது விவசாயத்துறையுடன் தொடர்புடைய திணைக்களங்களினால் துறைசார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பில் துறைசார்ந்த திணைக்களத் தலைவர்களால் விளக்கமளிக்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட பதில் விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் விரிவுரையாளர்கள், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், துறை சார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், விவசாய சம்மேளனங்களின் அங்கத்தவர்கள், மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது சிறுபோக அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அறுவடை பின்னர் அறுவடை முடிந்த வயல்களை ஒரு மாத காலத்திற்கு கால்நடைகளின் வாழ்வாதாரத்துக்காக தீயிட்டு எரிப்பதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அப்படி தீ வைக்க வேண்டுமாயின் சமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆலோசனைக்கு அமைவாக தீயிட்டுக் கொடுத்த முடிவு எனவும் தெரிவித்தார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்!!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை இளைஞன் அனோஜன் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த…

32 0 0
இலங்கை செய்திகள்

“ஸ்மைல் பிளீஸ்” : சாமர சம்பத் எம்.பி ஜனாதிபதியை வலியுறுத்தல்

ஜனாதிபதி பொதுக்கூட்டங்களில் முன்னாள் தலைவர்களை விமர்சித்து கோபமாக உரையாற்றுவதைத் தவிர்த்து, மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் மக்களை சந்திக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றில்…

32 0 0
இலங்கை செய்திகள்

அநோஜனின் விடுதலையை வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக வடக்கு ஆளுநர் வாக்குறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில், அவருக்கு கருணை வழங்கி தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை…

34 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை அல்-பஹ்றியா தேசிய பாடசாலையின் புலமைப்பரிசில் பரீட்சை சாதனையாளர்களுக்கு கௌரவிப்பு!

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில்…

32 0 0