உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

AI மூலம் முதலாம் உலகப் போர்க் கதைகளுக்கு உயிரூட்டும் பாடசாலை மாணவர்கள்!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
62 பார்வைகள்

இங்கிலாந்தின் ட்ரூரோவில் உள்ள பெனாயர் பாடசாலையைச் சேர்ந்த வரலாற்று மாணவர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதலாம் உலகப் போர் வீரர்களின் நாட்குறிப்புகளைத் குறும்படங்களாக உருவாக்கியுள்ளனர்.

கோர்ன்வால் பகுதியைச் சேர்ந்த ஜோன் ஃபிரெஞ்ச் என்ற சுரங்கத் தொழிலாளி, முதலாம் உலகப் போரின் போது ‘251-வது சுரங்கப் படைப்பிரிவில்’ (Tunnelling Company) சேர்ந்து பணியாற்றியவர்.

அவர் தன் போர் அனுபவங்களை நாட்குறிப்புகளாக எழுதியிருந்தார்.

மாணவர்கள் அந்த நாட்குறிப்புகள் மற்றும் அகழிகளின் காட்சி விவரிப்புகளை AI மென்பொருளில் உள்ளீடு செய்து, தத்ரூபமான படமாக உருவாக்கினர்.

இந்த நாட்குறிப்புகள் அவரது குடும்பத்தினரின் பரணில் கண்டெடுக்கப்பட்டவை.

இந்தப் படத்தைப் பார்த்த அவரது மருமகள் பென்னி பிக்டன், “இது நெஞ்சை உருக்கும் படைப்பாக உள்ளது” எனக் கூறி கண்ணீர் விட்டு நெகிழ்ந்தார்.

இந்த நிலையில் குறித்த முயற்சிக்காக ‘வெஸ்டர்ன் ஃபிரண்ட் எசோசியேஷன்’ வழங்கிய உள்ளூர் வரலாற்று ஆராய்ச்சிக்கான மெல்கம் டூலின் பரிசை (Malcolm Doolin Prize) இங்கிலாந்தின் ட்ரூரோவில் உள்ள பெனாயர் பாடசாலை வென்றுள்ளது.

“திரைப்படம் எடுக்கத் தேவையான பெரும் பொருட்செலவு மற்றும் நடிகர்கள் இல்லாத சூழலில், புத்தகங்களில் முடங்கிக்கிடக்கும் வரலாற்றுப் பதிவுகளுக்கு உயிரூட்ட AI ஒரு சிறந்த கருவியாகப் பயன்படுகிறது” என உள்ளூர் வரலாற்று ஆசிரியர் டோனி ஸ்மித் தெரிவித்தார்.

மாணவர்கள் தங்கள் சொந்த ஊரைச் சேர்ந்த மனிதர்களின் உண்மையான கதைகளை ஆராயும்போது, அது வரலாற்றை உணர்வுபூர்வமாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது என வரலாற்று ஆசிரியை டினா டுருலோ குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0