உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

பொலிஸ் நிலையத்தினுள் மோதலில் ஈடுபட்ட 5 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
29 பார்வைகள்

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மீண்டும் மோதலில் ஈடுபட்ட 5 பேருக்குத் தலா 300 ரூபாய் அபராதமும்  5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்துக் கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பில் விசாரணைக்காக அவர்கள் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அங்கு வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர் இரு தரப்பினரும் சமாதானமாகச் செல்ல இணக்கம் தெரிவித்தனர்.

இதனையடுத்து  பொலிஸ் நிலையத்தின் பல்வேறு  குற்றத்தடுப்பு பிரிவு  பொறுப்பதிகாரி    உப  பொலிஸ் பரிசோதகர்  கே.எல்.எம் முஸ்தபா    அவர்களைத் தலைமையகப் பொறுப்பதிகாரியின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட போது பொலிஸ் நிலைய வளாகத்திற்குள்ளேயே பொதுமக்களும் ஏனையோரும் வேடிக்கை பார்க்கும் வகையில் இரு தரப்பினரும் மீண்டும் தகராறில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர்.

இதனை அவதானித்த கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி பொது இடத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவித்த குற்றத்திற்காக இரு தரப்பையும் சேர்ந்த 5 பேரையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்ற உத்தரவிற்கமைய  பொலிஸ் நிலையத்திலுள்ள இரு வேறு சிறைக்கூடுகளில் அடைத்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு 5 சந்தேகநபர்களும் திங்கட்கிழமை (20) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணையின் போதுஇ சந்தேகநபர்கள் தரப்பில் மன்னிப்புக் கோரப்பட்டுச் சமாதானமாகச் செல்ல விரும்புவதாக மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும் வழக்கை விசாரித்த நீதிவான் 5 சந்தேகநபர்களுக்கும் தலா 300 ரூபாய் அபராதம் விதித்தார்.

அத்துடன்  5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 மாத கடூழியச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்தமாகத் தனியாக ஓர் ஆய்வை நடத்தி, எந்தக் காலத்தில் மனிதர்கள் அங்குப் புதைக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம்…

21 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச்…

38 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது!

சீனப் பிரஜை ஒருவரிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (21)…

59 0 0
இலங்கை செய்திகள்

சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்குப் பிணை!

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான்…

40 0 0