உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
61 பார்வைகள்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் கிலன்டில் தோட்ட பிரேமா பிரிவில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து அப் பகுதியில் உள்ள மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ், புஷ்பகுமார அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார அவர்களின் பணிப்புரைக்கு அமைய மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிசார் கிலன்டில் தோட்ட பிரேமா பிரிவிற்கு சென்றனர்.

கிலன்டில் தோட்ட பிரேமா பிரிவில் உள்ள சாலையில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது உயிரிழந்த நபர் மஸ்கெலியா நகரில் உள்ள பேருந்து நிலைய வீதியில் உள்ள வயதுடைய 48 பரமேஸ்வரன் ஆனந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சடலம் ஹட்டன் பொலிஸ் நிலைய ( சொக்கொ ) கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஹட்டன் நீதிமன்ற நீதிவான் பார்த்த பின்னர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்நிலையில் உடற்கூற்று பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

22 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

29 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0