உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைச் சந்தித்த முன்னாள் தென்கொரிய தூதுவர்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
31 பார்வைகள்

தென்கொரியாவின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் தென்கொரியத் தூதுவருமான ஜொங்-மூன் சோய், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது, ஆசிய நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மையின் முக்கியத்துவம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருதரப்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள “ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு” குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

நம்பிக்கையான, பாதுகாப்பான மற்றும் நிலையான ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதற்கான வாழ்த்துக்களை இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிர்ந்து கொண்டார்.

மேலும், தனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் பிராந்திய நாடுகளில் தென்கொரிய முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம், புதிய ஆசிய முன்முயற்சிகளுக்காக ஜொங்-மூன் சோய் ஆற்றிய பங்களிப்பையும், அவரது இந்த உத்தியோகபூர்வ சந்திப்பையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

68 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

70 0 0
இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

62 0 0