அமெரிக்க பசுபிக் விமானப் படைகளின் கட்டளைத் தளபதியான ஜெனரல் கெவின் ஷ்னைடர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் இலங்கை வந்துள்ள அவர், எதிர்வரும் 24ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மையை பேணல் மற்றும் குற்றச்செயல்களைத் தடுத்தல் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதற்காக, இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட பாதுகாப்பு முன்னுரிமைகள், பாதுகாப்புத் துறையில் ஒருவரோடொருவர் தொடர்புகொண்டு இயங்கும் திறனை பலப்படுத்துதல் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்படவுள்ளன.
இந்த நோக்கங்களுக்காக, ஜெனரல் கெவின் ஷ்னைடர் இலங்கையின் சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ பிரதானிகளை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
Related Posts
வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு துரோகம் இழைத்து, ஒற்றையாட்சிக்குள் முடங்குகிறது தமிழரசு கட்சி!
இலங்கைத் தமிழரசுக் கட்சி தற்போதைய சூழலில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மாறாக, ஒற்றையாட்சி முறைமைக்குள் (ஏக்கிய ராச்சிய) முடங்கி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர்...
கங்கன்குளம் ஶ்ரீ சுப்ரமணியம் சனசமூக நிலையத்திற்கு சத்தியலிங்கம் எம்பியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு.
வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கங்கன்குளம் ஶ்ரீ சுப்ரமணியம் சனசமூக நிலையத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்...
டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
டெங்கு காய்ச்சல் பரவும் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகபட்ச...
தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கான புதிய வரி ஏற்றுமதித் துறையை கடுமையாக பாதிக்கும்!
தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ள புதிய வரி, இலங்கையின் தேங்காய் ஏற்றுமதித் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி...
உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்துள்ள போதிலும் இலங்கையில் அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் குறைந்து வரும் நிலையில், உள்நாட்டு எரிபொருள் விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன என்பது குறித்த முழுமையான விவரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்...
செம்மணியின் அவலம் – 400 ஐ தாண்டிய எலும்புக் கூடுகள்!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 30ஆம் நாள் அகழ்வின் போது, இன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக 11 மனித என்புத் தொகுதிகள்...
சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை.!
மன்னார் தரவன் கோட்டை பகுதியில் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையம் ஒன்றில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதார...
காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு.!
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி, கொம்பன்குளம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆபத்தான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதப் பாகங்களைத் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட மாட்டாது.!
2026ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினராலும், மாணவர் அமைப்புகளினாலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிராகரித்துள்ள கல்வி அமைச்சு, பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்ட் மாதத்தில்...
கச்சாய் கண்ணகி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் 7ஆம் நாள் திருவிழா.!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தென்மராட்சி, கச்சாய் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் 7ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று (20.06.2026) சனிக்கிழமை இரவு மிக...









