வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கங்கன்குளம் ஶ்ரீ சுப்ரமணியம் சனசமூக நிலையத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களால் தளபாடங்கள் (பிளாஸ்ரிக் கதிரைகள்) வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (20.06.2026) கங்கன்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தனது 2026ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியொதுக்கீட்டினூடாக குறித்த அமைப்பிற்கு தளபாடங்கள் கொள்வனவு செய்வதற்காக ரூபா. இரண்டு இலட்சம் நிதியொதுக்கீடு மேற்கொண்டிருந்தார். பாராளுமன்அ உறுப்பினரின் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் ச.பத்மசீலன் அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் குறித்த நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தளபாடங்களை கையளிக்கும் இன்றைய நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், வெங்கலச்செட்டிகுளம் பிரதேசசபையின் தவிசாளர் முகம்மட் இம்தியாஸ், உபதவிசாளர் தே.சிவானந்தராசா, உறுப்பினர் உதயன், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், பாராளுமன்ற உறுப்பினரின் செட்டிகுளம் இணைப்பாளர் ச.பத்மசீலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.









