உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
23 பார்வைகள்

மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும். அதிகாரப் பகிர்வின் ஊடாக இதனைப் பெற்று இன்னும் எங்கள் மக்களின் தேவைகளை சிறப்பாகச் செய்ய வேண்டும் என மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமைய செயற்பாட்டாளர் எம்.ஐ.எம். முஹர்ரப் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்திற்கான தனியான நகர சபையை வலியுறுத்தி விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை(16) இரவு மருதமுனை தனியார் விடுதியில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமையத்தின் செயற்பாட்டாளர்களான பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸீல் மற்றும் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் ஆகியோர் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையில்,
மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும். இதைப் பெறுவது எமது தார்மீக உரிமையாகும். எங்களிடம் நிர்வாக ஆளணிகள் உள்ளன. அதிகாரப் பகிர்வின் ஊடாக இதனைப் பெற்று இன்னும் எங்கள் மக்களின் தேவைகளை சிறப்பாகச் செய்ய வேண்டும். நகரசபை கிடைப்பதன் ஊடாக இன்னும் அதிக அபிவிருத்திகளை மேம்படுத்த முடியும். மருதமுனை பிரதேசத்திற்குத் தனியான நகர சபை அமைப்பதற்கான அனைத்து தகுதிகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று எமது மக்கள் மருதமுனை பிரதேசத்திற்கான தனியான நகரசபை கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். சாய்ந்தமருது நகர சபை அம்மக்களுக்கு கிடைத்தது போன்று எமக்கும் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். அதே போன்று சாய்ந்தமருது நகர சபை வழங்கப்பட்ட விடயமானது அப்பகுதி மக்களின் தியாகத்திற்கும் போராட்டத்திற்கும் கிடைத்த ஒரு வெற்றி என்று நாம் கூற வேண்டும்.

எனவே தான் விரைவில் இவ்விடயம் குறித்து எதிர்காலத்தில் அரசாங்க அமைச்சு, அதிகாரிகள் உட்பட ஆளுநரையும் சந்தித்து பேச உள்ளதாக அவர் தனது கருத்தில் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

61 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

96 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

52 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

46 0 0