உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இராட்சத அலையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
20 பார்வைகள்

களுத்துறை – அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல்ல கடற்கரைப் பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக இராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தத் துயரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர் எஹலியகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது நண்பர்கள் குழுவுடன் மொரகல்ல கடற்கரைக்கு வருகை தந்துள்ளார். அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கடலில் இறங்கி நீராடிக் கொண்டிருந்த போது, திடீரென எழும்பிய பலத்த அலையொன்றில் சிக்கி அவர் ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளார் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அங்கிருந்தவர்களால் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது.!

கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் இருந்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் நேற்று…

78 1 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

36 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

46 0 0