உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் ஏற்பாடு: வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் விசாரணைக்கு அழைப்பு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
34 பார்வைகள்

தியாகி பொன். சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பொலிஸ் விசாரணைக்கு நாளை அழைக்கப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உத்தியோகபூர்வ தீர்மானத்துக்கு அமைவாக, தியாகி பொன். சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வு உரும்பிராயில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முன்பாக, நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு உணர்வெழுச்சியுடன் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பிரதேச சபைக்குச் சொந்தமான சந்தை வளாகப் பகுதியில் சபையின் உறுப்பினர்கள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் உரும்பிராய் பிரதேச இளைஞர்கள் இணைந்து இந்த நினைவேந்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், அங்கு வந்த பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வாளர்கள் ஏற்கனவே புகைப்படம் மற்றும் காணொளிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்தே, தமக்குக் கிடைக்கப் பெற்ற விசேட முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக தவிசாளர் தியாகராஜா நிரோஷை கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வருமாறு பொலிஸார் அழைத்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவிக்கையில்,”

அரசானது தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகளுக்குத் தடையில்லை எனப் பேச்சு அளவில் சர்வதேசத்துக்குத் தெரிவித்து வருகின்ற போதிலும், செயலளவில் அடிப்படை நினைவேந்தல் உரிமைகளைக்கூட அங்கீகரிக்க மறுக்கும் அடக்குமுறைப் போக்கையே தற்போது வரை கடைப்பிடித்து வருகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

14 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

11 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0