உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் ஜே.வி. பி க்கும் இடையே சந்திப்பு

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, இலங்கையிலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டேயை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் தனது மூன்று ஆண்டுகால இராஜதந்திரப் பணிக்காலத்தை நிறைவு செய்யும் பிரதி உயர்ஸ்தானிகர் பாண்டேயின் இறுதி உத்தியோகபூர்வ சந்திப்பாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக அண்மைய காலங்களில் எடுக்கப்பட்ட இருதரப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையில் பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய காலப்பகுதியில் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே வழங்கிய நட்புறவுடனான பங்களிப்புகளுக்குப் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதன்போது தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகள் குறித்தும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

தனது இராஜதந்திரக் கடமைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து இலங்கையிலிருந்து விடைபெறத் தயாராகும் பிரதி உயர்ஸ்தானிகர் பாண்டேயின் எதிர்காலப் பணிகள் சிறக்கத் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் ரில்வின் சில்வா இதன்போது பகிர்ந்துகொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

11 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

11 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0