உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானம்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ சமர்ப்பித்த சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ‘சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டை’ முன்னோக்கி கொண்டு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி, அவர் சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதன்படி, குறித்த மனுவை உத்தியோகபூர்வ விசாரணைக்காக எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றில் அழைப்பதற்கும் நீதியரசர்கள் ஆயத்தினால் திகதி குறிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று இந்த மனு நீண்ட நேரம் பரிசீலிக்கப்பட்டதன் பின்னரே, நீதியரசர்கள் குழுவினால் இந்த விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக நிலுவையிலுள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கை, தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னர் தீர்ப்பளித்திருந்தது.

மேல் நீதிமன்றம் வழங்கிய அந்த உத்தரவானது சட்டத்துக்குப் புறம்பானது என்பதால், அதனை முழுமையாகச் செல்லுபடியற்றதாக்குமாறு கோரியே யோஷித ராஜபக்ஷ தனது சீராய்வு மனுவின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசேட பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான யோஷித ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

13 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

11 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0