போதைப்பொருள் மற்றும் புகையிலைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் இன்றையதினம் சங்கானையில் இடம்பெற்றது.
ஆரம்பத்தில், போதை மற்றும் புகையிலை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக துண்டுப் பிரசுரங்கள் சங்கானை சந்தை – கடைகளின் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போதை மற்றும் புகையிலைக்கு எதிரான பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு கருத்துப் பகிர்வு இடம்பெற்றது.
வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கானை பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர், வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர், சமூக மட்ட அமைப்பினர், வர்த்தகர்கள் மற்றும் போதைக்கு எதிரானோர் கலந்துகொண்டனர்.






Related Posts
சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவி செய்த மக்களுக்கு சிவாஜிலிங்கம் உருக்கமான நன்றி!
தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது...
மொனராகலையில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்!
மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்...
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் பிரதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்குமாறு உத்தரவு!
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' நிதி கொடுக்கல் - வாங்கல் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதான விசாரணைகளை...
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு உத்தரவு!
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்துமாரு குற்றப்...
2018-ல் இருந்து 2022 வரையான காலப்பகுதிக்குள் தேரர்கள் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த 488 வழக்குகள் பதிவு!
2018-ல் இருந்து 2022 வரையான காலப்பகுதிக்குள் தேரர்கள் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் இந்த வழக்குகள்...
வலிகாமம் வடக்கில் கறுப்புக்கொடிகளுடன் மக்கள் போராட்டம்!
யாழ். வலிகாமம் வடக்கு பகுதிகளில் இன்னும் விடுவிக்கப்படாது உயர் பாதுகாப்பு வலயமாக வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ"...
இலங்கை மிக நம்பகமான நாடு; முதலீடு செய்ய முன்வாருங்கள்.!
"இலங்கை, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகள் மீது அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு திறந்த, அதேநேரத்தில் நம்பகத்தன்மைமிக்க கூட்டுறவு நாடாகும்" என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் விரைவாக விசாரிக்கப்படும்.!
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நிலுவையில் உள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை தொடர்கதையாக்க முடியாது. நாடளாவிய ரீதியில் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த...
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு.!
மட்டக்களப்பு கரடியனாறு - தும்பாஞ்சோலை பிரதேசத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (28) மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ்...
வயலுக்குள் குடைசாய்ந்த முச்சக்கரவண்டி; பெண் ஒருவர் உயிரிழப்பு.!
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 96ஆம் கட்டை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (29) முச்சக்கரவண்டி ஒன்று வயலுக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்....










