• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 29, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

2018-ல் இருந்து 2022 வரையான காலப்பகுதிக்குள் தேரர்கள் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த 488 வழக்குகள் பதிவு!

selvan by selvan
May 29, 2026
in இலங்கை செய்திகள்.
0
2018-ல் இருந்து 2022 வரையான காலப்பகுதிக்குள் தேரர்கள் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த 488 வழக்குகள் பதிவு!
Share on FacebookShare on Twitter

2018-ல் இருந்து 2022 வரையான காலப்பகுதிக்குள் தேரர்கள் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய பணிப்பாளர் ஜுவைரியா முகைதீன் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமய தலைவர்களால் நடைபெறும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு எதிராக கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் கண்டனப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இப் பேரணி இடம் பெற்றது.

இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனுராதபுரத்தில் 13 வயது சிறுமிக்கு ஏற்பட்ட இந்த அநீதிக்கு, பாலியல் வல்லுறவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது இலங்கையில் இருக்கும் அத்தனை ஆண், பெண்களுடைய கடமையுமாகும்.

போராட்டத்தில் முழுமையாக பங்கு பெறும்போது தான் எங்களுக்கான மாற்றத்தையும், வெற்றியையும் அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருத்தரால் நடத்தப்பட்ட இந்த சம்பவத்துக்கு உடனடியாக அவருக்கு தண்டனை வழங்க வேண்டும்.

இருந்தபோதிலும், அவருக்கான தண்டனையில் இருந்து அவருக்கு பிணை கிடைத்தது மிகவும் மனவேதனையும், வருத்தமாக உள்ளது.

அதே நேரத்தில், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் 2018-ல் இருந்து 2022 வரையான காலப்பகுதிக்குள் தேரர்கள் மூலம் சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதனால் வேதனையான விஷயம் என்னவென்றால், இவ்வாறான ஆட்களுக்கு சார்பாக வாதாட நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் தயாராக உள்ளனர்.

அவர்களுக்கு எதிராகத்தான் நாங்கள் முதலில் குரல் கொடுக்க வேண்டும்.

ஏனென்றால், அவர்களுக்கு பிள்ளைகள் இல்லையா? அவர்களுக்கு பெண்கள் இல்லையா? இந்த வேதனை, வலி அவர்களுக்கு வராதா?

மன்னாராக இருந்தாலும் சரி, புத்தளமாக இருந்தாலும் சரி, இலங்கையில் எந்த நீதிமன்றத்திலும் இவ்வாறான வல்லுறவு அல்லது பாலியல் கொடுமை ஏற்படும் போது, சட்டத்தரணிகள் அவ் வழக்குக்கு சார்பாக முன்னிலையாகக் கூடாது என்பதை இந்த தருணத்தில் மிகவும் வேதனையோடும், வலியோடும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் மேலும் குறி்ப்பிட்டுள்ளார்.

Related Posts

மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின்  தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது.

மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது.

by selvan
May 29, 2026
0

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (29)...

நுவரெலியாவில் இடம்பெற்ற வெடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

நுவரெலியாவில் இடம்பெற்ற வெடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

by selvan
May 29, 2026
0

நுவரெலியாவின் இராகலை மஹகுடுகலை, அப்பிள் பாம் பிரதேசத்தில், இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர், ஹைபொரஸ்ட் இல.01-ஐச் சேர்ந்த மகாலிங்கம் சித்திராதேவி எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்...

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவி செய்த மக்களுக்கு சிவாஜிலிங்கம் உருக்கமான நன்றி!

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவி செய்த மக்களுக்கு சிவாஜிலிங்கம் உருக்கமான நன்றி!

by selvan
May 29, 2026
0

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது...

மொனராகலையில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்!

மொனராகலையில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்!

by selvan
May 29, 2026
0

மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் பிரதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்குமாறு உத்தரவு!

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் பிரதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்குமாறு உத்தரவு!

by selvan
May 29, 2026
0

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' நிதி கொடுக்கல் - வாங்கல் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதான விசாரணைகளை...

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு உத்தரவு!

by selvan
May 29, 2026
0

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்துமாரு குற்றப்...

வலிகாமம் வடக்கில் கறுப்புக்கொடிகளுடன் மக்கள் போராட்டம்!

வலிகாமம் வடக்கில் கறுப்புக்கொடிகளுடன் மக்கள் போராட்டம்!

by Mathavi
May 29, 2026
0

யாழ். வலிகாமம் வடக்கு பகுதிகளில் இன்னும் விடுவிக்கப்படாது உயர் பாதுகாப்பு வலயமாக வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ"...

இலங்கை மிக நம்பகமான நாடு; முதலீடு செய்ய முன்வாருங்கள்.!

இலங்கை மிக நம்பகமான நாடு; முதலீடு செய்ய முன்வாருங்கள்.!

by Mathavi
May 29, 2026
0

"இலங்கை, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகள் மீது அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு திறந்த, அதேநேரத்தில் நம்பகத்தன்மைமிக்க கூட்டுறவு நாடாகும்" என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் விரைவாக விசாரிக்கப்படும்.!

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் விரைவாக விசாரிக்கப்படும்.!

by Mathavi
May 29, 2026
0

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நிலுவையில் உள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை தொடர்கதையாக்க முடியாது. நாடளாவிய ரீதியில் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த...

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு.!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு.!

by Mathavi
May 29, 2026
0

மட்டக்களப்பு கரடியனாறு - தும்பாஞ்சோலை பிரதேசத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (28) மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி