உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?

சினிமா 6 மாதங்கள் முன்
93 பார்வைகள்

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது.

இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியும் இதில் நடித்துள்ளார்.

2.45 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. வரும் 14-ம் ஆம் திகதி இந்தப் படம் வெளியாக உள்ளது. படத்துக்கான டிக்கெட் முன்பதிவும் இப்போது தொடங்கியுள்ளது.

நீதிக்காக போராடுபவர்களுக்கு உதவும் கருப்புசாமியாக சூர்யா வருகிறார். சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி என இருவரும் வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர். ‘மனுஷனுக்கு மனுஷன் உதவி பண்ணதான கடவுள் நம்ம படச்சு இருக்கார்’ என்ற வசனம் வருகிறது. அதன் வெளிப்பாடாகவே ட்ரெய்லரில் வரும் சில ஷாட்கள் உள்ளன. இதில் கருப்பாக நடித்துள்ள சூர்யாவுக்கு வில்லனாக ஆர்.ஜே.பாலாஜி வருகிறார். பேபி கண்ணன் என்ற பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

பாரதியார் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரை!

உலக இசைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையை ‘வருவாய்’ பாடல் படைத்துள்ளது. மகாகவி சுப்பிரமணிய…

147 0 0
சினிமா

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்…

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், இப்படத்தின் ‘ஃபயர் கிளிம்ப்ஸ்’…

130 0 0
சினிமா

“நான் வலிமையானவள்” – புற்றுநோய் சிகிச்சை குறித்து நடிகையின் நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகர் விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார். கடந்த…

132 0 0
சினிமா

திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்த நடிகை ஸ்ரீலீலா, தன்னுடைய திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டதாக கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். கன்னட சினிமாவில்…

101 0 0