உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மிஸ் ஆன பாகுபலி வாய்ப்பு.. RJ பாலாஜி ராஜமௌலி பற்றி சொன்ன விஷயம்!

சினிமா 5 மாதங்கள் முன்
67 பார்வைகள்

RJ பாலாஜி நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் குறிப்பிடத்தக்க படங்கள் கொடுத்து வருகிறார். தற்போது அவர் சூர்யா – த்ரிஷா நடித்து இருக்கும் கருப்பு படத்தை இயக்கி இருக்கிறார்.

வரும் மே 14ஆம் திகதி கருப்பு ரிலீஸ் ஆகும் நிலையில் RJ பாலாஜி பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் தனக்கு பாகுபலி பட வாய்ப்பு வந்தது பற்றி பேசி இருக்கிறார் அவர்.

“பாகுபலி முதல் பாகத்திற்கு மதன் கார்க்கி தமிழில் டைலாக் எழுதி இருந்தார். அவர் என்னை அழைத்து படத்தில் ராணா மகன் ரோலுக்கு உங்கள் குரல் வேண்டும் என ராஜமௌலி கேட்டார் என தெரிவித்தார். உடனே நானும் மகிழ்ச்சி ஆகிவிட்டேன்.”

“ஆனால் இரண்டு நாள் கழித்து போன் செய்து வேண்டாம் என கூறிவிட்டார். உங்கள் குரல் ரொம்ப பிரபலம், இது RJ பாலாஜி குரல் என படம் பார்ப்பவர்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். அது படத்தில் distraction ஆக இருக்கும் என ராஜமௌலி கூறியதாக தெரிவித்தார்.”

“எனக்கு ஏமாற்றமாக இருந்தது, ஆனால் அந்த லாஜிக் சரியான ஒன்று தான்” என RJ பாலாஜி கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

59 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0