உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

‘பலதார மணம், விவாகரத்து’: குஜராத் பொது சிவில் சட்ட மசோதா பற்றி இஸ்லாமிய பெண்கள் கூறுவது என்ன?

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
46 பார்வைகள்

குஜராத் சட்டப்பேரவையில் கடந்த வாரம் பொது சிவில் சட்ட மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் உத்தரகாண்ட்டுக்கு அடுத்தபடியாக பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றிய இரண்டாவது மாநிலமாக குஜராத் உருவெடுத்துள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, பாஜக இதை ‘நீதியை நோக்கிய ஒரு படி’ என்று அழைக்கிறது.

அதே நேரத்தில், இந்த மசோதா ‘தேர்தலைக்’ கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக இதன் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

திருமணத்தைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குதல், லிவ்-இன் உறவுகளைப் பதிவு செய்தல், பெண்களுக்குச் சமமான வாரிசு உரிமைகளை வழங்குதல் மற்றும் விவாகரத்துக்கான சீரான விதிகளை உருவாக்குதல் பற்றி இந்த மசோதா பேசுகிறது.

இந்த மசோதாவில் சில அம்சங்கள், இஸ்லாமியர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து சில இஸ்லாமிய பெண்களிடம் பேசி அவர்களின் கருத்துக்களை அறிய பிபிசி குஜராத்தி முயற்சித்தது.
இந்திய இஸ்லாமிய பெண்கள் இயக்கத்தின் நிறுவனரான ஜக்கியா சோமன், நாட்டில் பெண்களின் உரிமைகளுக்காக பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார். முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வருவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

குஜராத்தின் பொது சிவில் சட்ட மசோதா குறித்து பிபிசி குஜராத்தியிடம் பேசிய ஜக்கியா, “பொது சிவில் சட்டம் என்பது உண்மையில் பாலின நீதி மற்றும் சமத்துவத்தைப் பற்றியது. இஸ்லாமிய சமூகத்தின் குடும்பச் சட்டத்தில் எந்தச் சீர்திருத்தங்களும் செய்யப்படவில்லை. இதன் காரணமாக குழந்தை திருமணம், ஒருதலைபட்ச விவாகரத்து, பலதார மணம், சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை கிடைக்காதது, நிக்காஹ்-ஹலாலா போன்ற பிரச்னைகள் உள்ளன,” என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மதத் தலைவர்கள் குடும்பச் சட்டத்தில் சீர்திருத்தங்களை அனுமதிக்காதபோது, பொது சிவில் சட்டமே சிறந்த வழி, ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இது அளவுக்கு அதிகமாக அரசியல்மயமாக்கப்படுகிறது. ‘லவ் ஜிகாத்தை’ இந்தச் சட்டம் தடுக்கும் என்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. லவ் ஜிகாத் தொடர்பான முழு அரசியலும் இந்துத்துவ அரசியலின் ஒரு பகுதியாகும்,” என்கிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0