எரிவாயு நெருக்கடி: இந்திய மாநிலங்களில் தொழிற்சாலைகள் மூடல்.!
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் தாக்கம் இந்தியாவில் தீவிரமடைந்த நிலையில், எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையால் ராஜஸ்தான், மும்பை மற்றும் குஜராத் மாநிலங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.எல்பிஜி எரிவாயு நெருக்கடி காரணமாக ஜவுளி, பளிங்குக் கல் மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகள் செயலிழந்து வருவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளது.
மும்பையில் ஒரு எரிவாயு சிலிண்டரைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், கள்ளச்சந்தை விற்பனை காரணமாக விலைகள் இரட்டிப்பு, மும்மடங்காக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குஜராத்தின் சூரத் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான எரிவாயு பற்றாக்குறை காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள்வேலை இழந்து தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளது.
மும்பையில் ஒரு எரிவாயு சிலிண்டரைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், கள்ளச்சந்தை விற்பனை காரணமாக விலைகள் இரட்டிப்பு, மும்மடங்காக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குஜராத்தின் சூரத் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான எரிவாயு பற்றாக்குறை காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பெருமளவில் வெளியேறி வருகின்றனர்.
சமைப்பதே சிரமமாகி இருப்பதால் நகரங்களில் தங்குவது கடினமாகியுள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு தரப்பில் இந்த நிலைமை குறித்த தகவல்கள் மறுக்கப்பட்டாலும், தரைநிலை நிலவரம் மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டதால்கரோனா காலத்தைப் போன்ற வேலை இழப்பு சூழல் உருவாகும் அபாயம் எழுந்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாட்டால் உணவு தயாரிப்பும் பாதிக்கப்பட்ட நிலையில், ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் பிஹார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் நோக்கி திரும்பும் தொழிலாளர்கள் திரண்டுள்ளதால், ரயில்களில் அசாதாரண நெரிசல் காணப்படுகிறது.
போர் எப்போது முடிவடையும் என்பது தெளிவில்லாத நிலையில், இந்த நெருக்கடி நீடிக்கும் அபாயம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது