மத ரீதியில் இட ஒதுக்கீடு கூடாது: பாஜக எம்.பி. வலியுறுத்தல்.!
மாநிலங்களவையின் ஜீரோ நேரத்தில் உரையாற்றிய பாஜக எம்.பி கே. லட்சுமன், தமிழகத்தைத் தொடர்ந்து கேரளா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பினார்.
இடஒதுக்கீட்டு கொள்கை மத அடிப்படையில் அமையக்கூடாது என்றும், ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்குவது தவறான நடைமுறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த விடயத்தில் ஆந்திரா மற்றும் தமிழக உயர்நீதிமன்றங்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனால், மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.