ஊரடங்கு குறித்த வதந்திகளை நிராகரித்த இந்திய அரசாங்கம்!
ஈரானில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர் சூழ்நிலையை முன்னிட்டு, இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படலாம் என்ற வதந்திகளை இந்திய அரசாங்கம் முற்றிலும் நிராகரித்துள்ளது.
இந்தக் கூற்றுகள் முழுமையாகப் போலியானவை என தெரிவித்த ஹர்தீப் சிங் பூரி, அத்தகைய எந்தவொரு திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறை குறித்த அச்சங்கள் காரணமாக இவ்வாறான யூகங்கள் பரவியிருந்த நிலையில், அவற்றுக்கு தெளிவான விளக்கமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.