உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தேமுதிக தொகுதிகளை இறுதிசெய்ய சுதீஷ் தலைமையில் 6 பேர் குழு நியமனம்.!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
49 பார்வைகள்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அண்மையில் இடம்பெற்ற கூட்டணிக் கலந்துரையாடலில், தேமுதிகக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.


இந்த நிலையில், போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 6 பேர் கொண்ட குழுவை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்தக் குழுவுக்கு எல்.கே. சுதீஷ் தலைமை தாங்குகிறார்.
மேலும், இக்குழுவில் இளங்கோவன், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் எம்.ஆர். பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.


இதேவேளை, விருகம்பாக்கம், ரிஷிவந்தியம், விருதுநகர், சாத்தூர், பண்ருட்டி, விருதாச்சலம், சேலம் மேற்கு, ஆம்பூர் உள்ளிட்ட 25 தொகுதிகளை தேமுதிக தனது விருப்பப் பட்டியலாகதிமுகவிடம் முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தொடர்பான இறுதி முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0