ஐக்கிய ஜனதா தள தலைவராக நிதிஷ் போட்டியின்றி தேர்வு.!
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) தேசிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் தலைவர் தேர்தலுக்கான மனுக்கள் மார்ச் 22ம் தேதி முடிவடைந்து, 23ம் தேதி பரிசீலிக்கப்பட்டது.
மனுக்கள் திரும்பப் பெறும் காலக்கெடு செவ்வாய்க்கிழமை காலை 11 மணியுடன் முடிவடைந்த நிலையில், நிதிஷ் குமார் மட்டுமே மனு தாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
ஜேடியு செயல் தலைவர் சஞ்சய் ஜா செய்தியாளர்களிடம், நிதிஷ் குமாரின் இடைவிடாத உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் கட்சி இந்நிலையில் வந்ததாக கூறி, அவரது தலைமையை பாராட்டியுள்ளார்.