தொழிற்சாலை’ வரையறை மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.!
களூரு குடிநீர் வடிகால் வாரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், கிளப்புகள் மற்றும் அரசின் நலத்துறைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை தொழில் தகராறு சட்டத்தின் கீழ் “தொழிற்சாலை” என்ற வரையறையில் உள்ளதாக கூறியுள்ளது.
இதனிடையே, மத்திய அரசு மற்றும் குஜராத், மத்திய பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநில அரசுகள் இதற்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் சம்பந்தப்பட்ட 46 மனுக்களையும் உச்சநீதிமன்றம் கடந்த 3 நாட்களாக விசாரித்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்டது.உச்சநீதிமன்றம் இதற்கான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.