இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரிப்பு.!
நாட்டில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 2025ஆம் ஆண்டில் 76,657 பதிவாகி கடந்த ஆண்டை விட 28,322 குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய சைபர் குற்றப் பதிவு இணையதளம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை இணையமைச்சர் பந்தி சஞ்சய் குமார் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாவது
கடந்த சில ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2022ல் 62,224, 2023ல் 40,066, 2024ல் 48,335 ஆக இருந்துள்ளதாகும். கடந்த ஆண்டில் ஆபாச படங்கள் தொடர்பான புகார்கள் 37,743, பாலியலை தூண்டும் செயல்கள் 19,703, பாலியல் வன்கொடுமை தகவல்கள் 8,780 மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தகவல்கள் 10,431 பதிவாகியுள்ளன. ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்களில் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை சட்ட அமைப்புகள் விசாரித்து நடவடிக்கை எடுக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.