உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கூட்டணி குறித்து பரவும் வதந்திகள்: மௌனம் கலைத்த தளபதி விஜய்!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

கூட்டணி குறித்து வரும் வதந்திகளை நம்பாதீர்கள். நம் தலைமையில் தான் ஆட்சி என்று இப்தார் நோன்பு திறப்பு விழாவில் விஜய் கூறினார்.தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்றார். இப்தார் நோன்பு திறந்த பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு தொழுகையில் அவர் கலந்து கொண்டார்.

பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் குறிப்பிட்டார்.நம்முடைய தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். யார் என்ன அவதூறு பரப்பினாலும், தயவுசெய்து அதை நம்பாதீர்கள். எல்லாம்வல்ல இறைவனின் அருளால் நாம் நினைச்ச டார்கெட்டை நம்மால் நிச்சயமாக அடைய முடியும். என்னுடைய இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ரமலான் நல்வாழ்த்துகள். நம்பிக்கையோடு இருங்கள், நல்லது நடக்கும், வெற்றி நிச்சயம்.இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார்.

தமிழகத்தில் எந்த கூட்டணியை நோக்கி விஜய் நகர்கிறார் என்ற பேச்சுகள் பல வாரங்களாக ஓடிக் கொண்டு இருந்தன. அதிலும் கடந்த சில நாட்களாக கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக அவர் டில்லி சென்ற போதும் கூட அதிமுக பாஜவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக தான் பேச்சுகள் பரவிக்கிடந்தன.

இதனால் தவெக தொண்டர்கள் மட்டுமல்லாது, மற்ற கட்சிகள் மத்தியிலும் தவெக மீது ஒரு சந்தேக கண்ணோட்டமே காணப்பட்டது. இதுபற்றி விஜய் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் கருத்துகள் எழுந்தன.

இப்போது, ‘கூட்டணி தொடர்பான அனைத்து பேச்சுகளும் வதந்தி, நம்பாதீர்கள், நம் தலைமையில் தான் ஆட்சி’ என்று அவராகவே அறிவித்து விட்டதால், 234 தொகுதிகளிலும் தவெக தனித்துதான் போட்டி என்பது உறுதியாகிவிட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0