உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வடக்கு டில்லியில் பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
57 பார்வைகள்

வடக்கு டில்லியில், இரும்பு பாலம் திடீரென உடைந்து விழுந்ததில், யாசகம் எடுத்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.வடக்கு டில்லியின் ரூப்நகர் பகுதியில், 60 அடி நீளத்திற்கு, 50 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலம் ஒன்று இருந்தது.அதன் கீழ் தண்ணீர் ஓடை சென்று கொண்டிருந்ததால், அதை கடக்க அந்த பாலத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

நேற்று காலை, 9:30 மணிக்கு அந்த இரும்பு பாலம் திடீரென உடைந்து, உட்புறமாக விழுந்தது.இதில், யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்த, 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் ஓடை நீரில் விழுந்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர், டில்லி பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அந்த பகுதியில் இருந்து அந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர்.அந்த பகுதியை சுற்றிலும் தடையை ஏற்படுத்திய டில்லி பொலிஸார் , மக்கள் யாரும் அதன் அருகில் செல்லாதவாறு பார்த்துக் கொண்டனர்.

அந்த இரும்பு பாலம் திடீரென உடைந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.எனினும், 50 ஆண்டுகள் மட்டுமே பழமையான அந்த பாலம், திடீரென உடைந்து விழுந்ததன் பின்னணியில் நாசக்கார செயல்கள் ஏதும் இருக்குமா என பொலிஸார் விசாரிக்கின்றனர்.

காலை 9:30 மணிக்கு முன்னதாக, காலை நேரத்தில் விபத்து நடந்திருந்தால், அந்த வழியாக ஏராளமான பாடசாலை குழந்தைகள் இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் பள்ளிக்கு சென்ற படி இருப்பர்.அந்த நேரத்தில், பாலம் இடிந்து விழுந்திருந்தால், பாதிப்பு அதிகமாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கூறினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0