உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை மே.4-ம் தேதி நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், திமுக கூட்டணியில் கட்சிகள் இட ஒதுக்கீடு தொடர்பாக பரபரப்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், மதிமுகக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2, கொமதேகவுக்கு 2 மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (மார்ச் 18) இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு ஒப்பந்தம் திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் முன்னிலையில் கையெழுத்தானது.

மு.வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, கடந்த முறையைவிட இத்தேர்தலில் கூடுதல் இடங்களை கோரினாலும் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், திமுக ஒருபோதும் கட்டளையிடவில்லை, அழுத்தம் செலுத்தவில்லை என்றும், கூட்டணியில் புதிய கட்சிகள் சேருவதால் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும், ஒற்றுமையைசீர்குலைக்க முயன்ற பாஜகவை வீழ்த்துவதே நோக்கம் என்பதால் ஓரணியில் சேர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0