சமையல் எரிவாயு பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை.!
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்தார், சிலிண்டர்களை பதுக்குவோர் மற்றும் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாக.
அவர் கூறியதாவது, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இந்தியாவில் எரிபொருள் நெருக்கடி ஒரு கவலைக்குரிய விஷயமாக நீடிக்கிறது. ஆனால், சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.
அதேநேரம், எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மாற்றாக, சமையலுக்கு மின்சாரம் உள்ளிட்ட இதர எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவது கூடுதல் நன்மை தரும்.தற்போது எந்தவொரு விநியோகஸ்தரிடமும் கையிருப்பு இல்லாத நிலை ஏற்படவில்லை. வீடுகளுக்கான சிலிண்டர் விநியோகம் வழக்கம்போலவே நடைபெற்று வருகிறது.
வணிக ரீதியிலான எல்பிஜி விநியோகம் ஆரம்பத்தில்நிறுத்தப்பட்டிருந்தாலும், தற்போது பகுதி அளவில் சீரமைக்கப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டாளர்கள் படிப்படியாக குழாய் வழி இயற்கை எரிவாயுவுக்கு மாற வேண்டும் என்று அவர் கூறினார்.
சுஜாதா சர்மா தகவலின்படி, கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் 12,000க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு, சுமார் 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.