உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ரஜினிகாந்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஆதவ் அர்ஜுனா.!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
39 பார்வைகள்

த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கடந்த சில தினங்களுக்கு முன்பு மேடைபேச்சொன்றின் போது நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க. மிரட்டலால் தான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைத்துறையினர் வரை பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, கொளத்தூரில் நேற்று நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகியும், ரஜினி ரசிகருமான அசோக் பேசுகையில், ரஜினிகாந்த் பற்றி த.வெ.க.வில் யார் எது பேசினாலும், நான் கேள்வி கேட்பேன். ரஜினியை பற்றி நீங்கள் பேசியது குறித்து மேடையில் விளக்கம் கொடுக்க வேண்டும் .

நான் இன்று நல்ல நிலைமையில் நேர்மையாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ரஜினிகாந்த் என தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

தலைவர் ரஜினிகாந்த் மீது எங்களுக்கு வெறுப்பு கிடையாது, அன்பு மட்டும்தான் இருக்கிறது. ரஜினியை சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமோ அல்லது பயந்துவிட்டார் என்பதையோ நான் சொல்லவில்லை. தி.மு.க.வின் சூழ்ச்சி என்றுதான் கூறினேன்.

நான் சொல்லவந்த நோக்கம் வேறு. நான் பேசியது உங்களுக்கு வருத்தத்தைக் கொடுத்திருந்தால், அதற்காக எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறேன். வேறு யாருக்கும் பதில் கொடுக்க இங்க வரவில்லை. ரஜினிகாந்த் அறிக்கை படித்தேன். அவரது உணர்வுக்கு மரியாதை கொடுக்கிறேன் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0