சென்னை தேர்தல்: மெரினா, வில்லிவாக்கம், எழும்பூரில் லட்சக்கணக்கான பணம் பறிமுதல்.!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படைகள் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
சென்னை மெரினா காமராஜர் சாலையில், சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் பறக்கும் படை பொறுப்பாளர் உதவி செயற்பொறியாளர் திலக் தலைமையில் செவ்வாய் மாலை நடந்த சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கார் ஒன்றில் ரூ.1.29 லட்சம் இருந்தது தெரியவந்தது. இது பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் காரை ஓட்டி வந்த நபர் மயிலாப்பூர் வாசியார் கார்த்திக் என்பதும், கட்டுமான பணிக்காக பணத்தை கொண்டு சென்றதும் அறியப்பட்டது.
இதேபோல், வில்லிவாக்கம் தொகுதியில் ரூ.1.16 லட்சம் மற்றும் எழும்பூர் தொகுதியில் ரூ.55 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தேர்தல் விதிமுறைகளின் படி, உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்தை மீறி பணம் கொண்டு சென்றால் அது பறிமுதல் செய்யப்படுகின்றது.