உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டம்: வெளிநாட்டு நபர்கள் 7 பேர் கைது.!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
49 பார்வைகள்

இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில், ஆறு உக்ரேனியர்கள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கடந்த வாரம் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த கைது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நபர் கொல்கத்தா விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதுடன், உக்ரேனியர்கள் டெல்லி மற்றும் லக்னோ விமான நிலையங்களில் பிடிபட்டனர்.சந்தேகநபர்கள் செல்லுபடியாகும் விசாக்களுடன் இந்தியாவிற்குள் நுழைந்திருந்தாலும், அனுமதி இன்றி மிசோரம் பகுதிக்கு சென்றதாகவும், அங்கு இந்தியாவிற்கு விரோதமான குழுக்களுடன் தொடர்பு கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், ஐரோப்பாவில் இருந்து ட்ரோன் உபகரணங்களை மிசோரத்திற்கு கொண்டு வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.பின்னர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் மூன்று நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதுடன், பின்னர் மார்ச் 27ஆம் திகதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.எல்லைத் தாண்டிய அச்சுறுத்தல்களுடன் தொடர்புடைய இந்த குழு பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு முகமை குற்றம் சாட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0