13 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளைஞர் கருணைக் கொ*லை.!
டெல்லி அருகிலுள்ள காசியாபாத் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் ராணா, 13 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த பின்னர், குடும்பத்தினரின் கண்ணீரான விடையுடன் உயிர் பிரிந்தார்.பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்த அவர், 2013ஆம் ஆண்டு விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் கடுமையான மூளை காயம் அடைந்து நீண்டகாலமாக நினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பல ஆண்டுகள் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவருக்கு கண்ணியமான முறையில் உயிரிழக்கும் உரிமையை வழங்குமாறு பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, நாட்டில் முதன்முறையாக இத்தகைய அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மருத்துவ உபகரணங்கள் படிப்படியாக அகற்றப்பட்டு வரும் சூழலில், குடும்பத்தினர் அவருடன் கடைசி நிமிடங்களை கழித்தனர். அந்த தருணங்களில், “அனைவரையும் மன்னித்துவிடு, நீ கிளம்ப வேண்டியநேரம் வந்துவிட்டது” எனக் கூறி குடும்பத்தினர் கண்ணீருடன் விடைபெற்றனர்.இந்த உணர்ச்சிபூர்வமான காட்சி சமூக வலைதளங்களில் பரவி பலரையும் நெகிழச் செய்துள்ளது.