கொல்கத்தா தாக்குதல் விவகாரம்: பாஜக மீது மம்தா கடும் விமர்சனம்.!
மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், கொல்கத்தா கிரிஷ் பார்க் பகுதியில் அமைச்சர் ஷாஷி பாஞ்சாவின் இல்லம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் ஏற்பாடு செய்த பேரணி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மம்தா பானர்ஜி, அமைச்சர் ஷாஷி பாஞ்சா வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்காக பாஜக வெட்கப்பட வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், தமது இல்லம் மற்றும் திரிணமூல் தலைவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்த விரும்பினால் முயற்சி செய்யலாம் என்றும், அவற்றை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தங்களுக்கு தெரியும் என்றும் அவர் சவால் விடுத்தார்.