உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சிபிஐ விசாரணை – தேர்தல் தொடர்பாக விஜய் வைத்த கோரிக்கை.!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
42 பார்வைகள்

தேர்தல் திகதி வெளியான நிலையில் சென்னையில் ஆஜராக அனுமதிக்குமாறு சிபிஐயிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இதனிடையே நேற்று கரூர் கூட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மன் அடிப்படையில் டெல்லி சென்ற தவெக தலைவர் விஜய், சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி 7 நடைபெற்ற விசாரணையில் விளக்கமளித்தார். முன்னதாக 2 முறை விசாரணைக்காக டெல்லி சென்ற நிலையில், இது 3ஆம் கட்ட விசாரணை ஆகும். இந்நிலையில், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பரப்புரை உள்ளிட்ட தேர்தல் பணிகள் உள்ளதால் டெல்லி வந்து செல்வதில் சிரமம் உள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரியில் தவெக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் தவெக தலைவர் விஜய் இன்று தவெக தலைமை அலுவலகமான பனையூரில் வைத்து நேர்காணல் நடத்துகிறார்.

தவெக அதிமுக கூட்டணியில் இணைய உள்ளதாகவும், விஜய்க்கு துணை முதல்வர் பதவி தர உள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடனே கூட்டணி என செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0