உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஒடிசாவில் 11 மாவோயிஸ்ட்கள் சரணடைவு.!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் தொடர்ச்சியான நடவடிக்கையையடுத்து 11 மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர்.ஒடிசா மாநிலத்தின் பஸ்தாரா–கும்சர் பகுதிக்குட்பட்ட கலாஹண்டி, ராயகடா மற்றும் கந்தமால் மாவட்டங்களில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததுடன், மாவோயிஸ்ட்கள் சரணடையவும் ஊக்குவிக்கப்பட்டு வந்தனர்.


இந்நிலையில், அப்பகுதியில் மண்டலக் குழு உறுப்பினராக செயல்பட்டு வந்த மூத்த மாவோயிஸ்ட் தலைவர் நகுல் உள்ளிட்ட 11 பேர், மாநில காவல்துறைத் தலைவர் குரானியாவின் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர்.நகுல் குறித்து தகவல் வழங்குவோருக்கு 22 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் சரணடைந்த மற்ற ஐந்து பேரைப் பற்றிய தகவல்களுக்கு மொத்தமாக 63.25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சரணடைந்த மாவோயிஸ்ட்கள் ஏ.கே.–47, இன்சாஸ் துப்பாக்கி, எஸ்.எல்.ஆர் துப்பாக்கி உள்ளிட்ட 11 ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.


இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த மாநில காவல்துறைத் தலைவர் குரானியா, “நகுல் போன்ற மூத்த மாவோயிஸ்ட்கள் சரணடைந்தது அந்த இயக்கம் பலவீனமடைந்துள்ளதை காட்டுகிறது. பாதுகாப்புப் படையினரின் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ஒடிசாவில் மாவோயிஸ்ட் இயக்கம் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது” என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0