நேபாளத்தில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – ஏழு இந்தியர்கள் உயிரிழப்பு.!
நேபாளம், காத்மண்டுவுக்கு மேற்கில் உள்ள ஷாஹித் லகான் கிராமத்துக்கு அருகில் பேருந்தொன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் இந்தியாவைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, 9 பேர் காயமடைந்துள்ளனர்.பேருந்தில் கோயிலுக்குச் சென்றவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த பேருந்தானது மலைப் பாதையிலிருந்து கீழ்நோக்கி வரும்போது வளைவில் திரும்பியபோது சுமார் 150 மீட்டர் உயரத்திலிருந்து பள்ளத்தில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.