புதிய கட்சியின் பெயரை அறிவித்த சசிகலா.!
அதிமுக-வின் தற்காலிக பொதுச்செயலாளராக செயல்பட்ட வி.கே. சசிகலா, “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற புதிய கட்சியின் பெயரை அறிவித்து, அதன் சின்னமாக “தென்னந்தோப்பு”-ஐ அறிமுகப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “தமிழ்நாட்டு மக்களை திமுக கசக்கிப் பிழிந்துகொண்டு இருக்கிறது. இதையெல்லாம் பார்த்து, இதற்கு ஒரு முடிவு கட்டும் எண்ணத்தில் புதிய கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்தேன்” என்றார்.
மேலும், விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, “ஒத்துக் கருத்து உடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்” என அவர் தெரிவித்தார்.